Spotlightதமிழ்நாடு

ஜல்லிக்கட்டு “கோலிசோடா”வுக்கு எகிறும் மவுசு!

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கோலிசோடாவுக்கு அதிகமான மவுசு இருந்து வந்தது. நடுவில் சில காலங்கள் பிளாஸ்டிக் கேன்களில் அடைக்கப்பட்ட வெளிநாட்டு குளிர்பானங்கள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்து வந்தது.

இந்த நிலையில், மீண்டும் கோலிசோடாவுக்கு மவுசு எகிற ஆரம்பித்திருக்கிறது. ஆம், படிப்படியாக மக்கள் வெளிநாட்டு குளிர்பானங்களின் பயன்பாட்டை குறைத்துவரும் இச்சூழலில் மீண்டும் நம் மண்ணின் கோலிசோடா பக்கம் திரும்ப ஆரம்பித்திருக்கின்றனர்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் தமிழ்நாட்டில், மக்கள் குளிர்பானங்களை அதிகமாக பருகி வருகின்றனர். அதிலும், மோர், கூழ், இளநீர், சர்பத், பதனீர் என நம் நாட்டு பானங்களை அதிகமாக பருகி வரும் இந்த சூழலில் நம் நாட்டில் நம் மண் மாறாமல் இருந்து வந்த கோலிசோடாவையும் மக்கள் மீண்டும் சுவைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதிலும், குறிப்பாக ஜல்லிக்கட்டு என்ற நிறுவன கோலிசோடாவிற்கு மக்கள் மத்தியில் அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.

ஜல்லிக்கட்டு கோலிசோடாவின் தரம், சுவை, சுத்தம் என அனைத்தும் ஒருசேர இருப்பதால் மக்கள் அதிகமாக ஜல்லிக்கட்டு கோலிசோடாவையே அதிகம் விரும்பி பருகி வருகின்றனர்..

தொடர்ந்து தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களுக்கும் ஜல்லிக்கட்டு கோலிசோடா பயணப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button