
ஜமீல் இயக்கத்தில் மதியழகன் தயாரிப்பில் Etcetera entertainment மற்றும் Malik streams corporation சார்பில் உருவாகியிருக்கும் படம் தான் ,”மஹா”.
இப்படத்தில் முதன்மை நாயகியாக நடித்திருக்கிறார் ஹன்சிகா. சிறப்பு தோற்றமாக சுமார் 40 நிமிடங்கள் படத்தில் தோன்றி அசத்திருக்கிறார் சிம்பு.
வரும் ஜூலை 22 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஏற்கனவே படத்தின் ட்ரெய்லர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
கொரோனா ஊரடங்கு இப்படத்தை சிரமப்பட்டு எடுத்துள்ளது படக்குழு. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை மூன்று நாட்களில் எடுத்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் படக்குழு தள்ளப்பட்டது.
அதே சமயத்தில், படத்தில் வில்லனாக நடித்தவரும் உடனடியாக அடுத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள செல்ல நேர்ந்ததால் உடனடியாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க வேண்டிய சூழல், இதனால் தொடர்ச்சியாக 22 மணி நேரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டு ஆக்ஷன் காட்சியில் நடித்துக் கொடுத்திருக்கிறார் ஹன்சிகா.
ஹன்சிகாவின் இந்த ஈடுபாட்டிற்கு தயாரிப்பாளர் நன்றியும் தெரிவித்துள்ளார்.