தேசத்துக்கு எதிராக பேசியதாக திரைப்பட இயக்குனர் பாரதிராஜா மீது திருவல்லிக்கேணி போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்து மக்கள் முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளர் ஒருவர் புகார் அளித்தார்.
அதன்படி, கோவையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு காரணமாக திரைப்பட இயக்குநர் அமீர் மீது கோவை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் அமீருக்கு ஆதரவாக நேற்று நிருபர்களை சந்தித்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தேசத்திற்கு விரோதமாகவும், தமிழக அரசை மிரட்டும் விதமாகவும், தமிழகத்தில் மாவோயிஸ்ட் இயக்கம் மற்றும் நக்சலைட் இயக்கங்கள் சுவடுகள் தமிழகத்தில் இல்லை.
அப்படி ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள் என்று தமிழக அரசை எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசி இருக்கிறார். இதனால் அவர் மீது, சர்சைக்குரிய பேச்சு, பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.