
வெற்றிமாறன் – தனுஷ் மூன்றாவது முறையாக இணைந்து வெளிவந்துள்ள படம்தான் ’வடசென்னை’. அநேக நடிகர்களுடன் வெளிவந்துள்ள கேங்ஸ்டர் படம். மூன்று பகுதிகளாக வெளியாக உள்ள படத்தின் முதல் பார்ட் வெளியாகி சினிமா ரசிகர்கள், நட்சத்திரங்கள் என அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் எஸ் ஜே சூர்யா தனது ட்விட்டரில் படத்தை பாராட்டி கருத்தை பதிவிட்டுள்ளார். ”திரைக்கதை, காட்சி அமைப்பதில் வல்லவரான மார்ட்டின் சோரெஸ்ஸே படத்தினை நார்த் மெட்ராஸ் பின்னணியில் பார்த்தது போல உள்ளது. அருமையான படம். தனுஷ் நுட்பமாக நடித்துள்ளார், அருமை.
ராஜனின் பகுதிகள் சூப்பர்ப். அனைத்து நடிகர்களும் அருமையாக நடித்துள்ளனர். வாழ்த்துக்கள் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் படக்குழுவுக்கு. கட்டாயம் பாருங்க” என்று கூறியுள்ளார்.
Facebook Comments





