Spotlightசினிமா

“ஜென்டில்மேன்2” படத்தின் இயக்குனராக ஏ கோகுல் கிருஷ்ணா அறிவிப்பு!

யாரிப்பாளர் கே. டி. குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘ஜென்டில்மேன்2’ இவர் தனது ஜென்டில்மேன், படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர்.

இப்போது இதன் இரண்டாம் பாகமாக ‘ஜென்டில்மேன்2’ பிரம்மாண்ட படத்தை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் தயாரிப்பாளர். ஏற்கனவே இப்படத்தின் இசை அமைப்பாளராக கீரவாணிஅறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் இரண்டு கதாநாயகிகளாக நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால் ஆகியோர் பெயரை அறிவித்தார்.

நானி கதாநாயகனாக நடித்த ‘ஆஹா கல்யாணம்’ இயக்கிய A.கோகுல் கிருஷ்ணா வை தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் ‘ ஜென்டில்மேன்2 ‘ வின் இயக்குனர் என்று அறிவித்திருக்கிறார்.

A.கோகுல் கிருஷ்ணா ஏற்கனவே பிரபல டைரக்டர் விஷ்ணு வர்தனிடம் பில்லா, அறிந்தும் அறியாமலும், சர்வம், பட்டியல் ஆகிய படங்களின் இணை இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button