
நாயகன் நானி நடிக்கும் படம் ‘ஜெர்சி’. ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானரில் உருவாகும் இப்படத்தை கெளதம் டின்னானுரி இயக்குகிறார். இதில் நானிக்கு ஜோடியாக ஷரதா ஸ்ரீநாத் டூயட் பாடி ஆடி வருகிறார்.
மேலும், முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார். ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கும் இதற்கு சனு ஜான் வருகீஸ் ஒளிப்பதிவு செய்கிறார், நவீன் நூலி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.
இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தை அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல் 19-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக நானி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Facebook Comments





