Spotlightசினிமாதமிழ்நாடு

அரசியல் பிரமுகரால் சித்ராவிற்கு தொல்லை?. கிடுக்குப்பிடி விசாரணை!

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவுக்கு அரசியல் பிரமுகர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் தொந்தரவு தந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.. அவர் யார் என்ற விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்..

மேலும் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார் என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமாகி உள்ளது. ஹேமந்த் வாக்குமூலத்தை அடுத்து, சித்ராவின் செல்போன்தான் இந்த வழக்கில் முக்கிய க்ளூவாகவும், சாட்சியாகவும் உள்ளது.. அந்த வகையில், சித்ராவின் செல்போனை நேற்று முன்தினம் முதலே ஆய்வு செய்வதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. அதன்படி, சித்ரா கடைசியாக பேசியதும், அதிகமுறை பேசியதும், அவருடைய அம்மாவுடன்தான் என்பது தெரியவந்துள்ளது.. அம்மாவுக்கு மெசேஜ்களையும் சித்ரா அனுப்பியிருப்பதையும் போலீசார் உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில், மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.. கடந்த அக்டோபர் 21-ம் தேதி பெரம்பலூரில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று வந்துள்ளார். அங்கு பொதுமக்களுடன் ஏராளமான செல்பிக்களை சித்ரா எடுத்து மகிழ்ந்துள்ளார். மேலும் ஜனவரியிலும் ஒரு நிகழ்ச்சிக்கு வருவதாக ஒப்புக் கொண்டுருந்திருக்கிறார்.

அந்த நிகழ்ச்சிக்கு தினேஷூம் தீவிரமான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். இந்த சமயத்தில்தான், அதாவது சித்ரா பெரம்பலூருக்கு சென்று வந்த பின்னர் சித்ராவின் வாட்ஸ்அப் நம்பருக்கு அரசியல் பிரமுகர் ஒருவர் மெசேஜ் செய்து கொண்டே இருந்தாராம். இந்த புது வருடத்தை தன்னுடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டே இருந்தாராம்.. அந்த அரசியல் பிரமுகர்தான் யார் என்று தெரியவில்லை. இவரை தவிர, மேலும் சிலர் சித்ராவுக்கு ஏடாகூடமான மெசேஜ்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்களாம்..

அதுகுறித்தும் விசாரணை நடக்கிறது.. இவர்களில் யாராவது சித்ராவுக்கு அத்துமீறி தொல்லை கொடுத்தார்களா? மிரட்டினார்களா? அந்த அழுத்தம் காரணமாக சித்ரா தற்கொலை நடந்திருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close