சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘காலா’. படத்தினை இந்த மாதம் 27 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஆனால், திரைத்துறையினரின் வேலைநிறுத்தத்தால் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படலாம் எனத் தெரிகிறது.
இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியாகி அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுத் தந்தது. இப்படத்தில் ரஜினிகாந்த் அரசியல் வசனங்களை அள்ளித் தெளித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
படத்தின் பல இடங்களில் இவர் பேசும் வசனங்கள் ரசிகர்களிடையே மிகுந்த அதிர்வலையை ஏற்படுத்தும் என்றும் தெரிகிறது. ரசிகர்கள் அனைவரும் அந்த ஒரு தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Facebook Comments