Spotlightசினிமா

கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் தெரியுமா.?

லகநாயகன் கமல்ஹாசன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளிவந்திருக்கும் திரைப்படமான “விக்ரம்” மிகப்பெரும் வெற்றியை பெற்றது. 4 வருட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசனுக்கு இப்படம் ஒரு மகத்தான கம்பேக் படமாகவும் அமைந்தது.

இதனைத் தொடர்ந்து விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தையும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குவார் என்ற தகவலையும் கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். அதேசமயம், கம்ல்ஹாசனின் அடுத்த படம் என்னவாக இருக்கும்.? இயக்குனர் யார் .? என்ற கேள்வி பலருக்கும் எழுந்த வண்ணம் இருந்தது.

இதற்கு சமீபத்திய பேட்டியில் விடையளித்த கமல்ஹாசன், தனது அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குனர் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

விஸ்வரூபம் 1 & 2 படங்களின் எடிட்டராக பணிபுரிந்த மகேஷ் நாராயணன் தான் கமல்ஹாசனின் அடுத்த பட இயக்குனராம். இவர், ஏற்கனவே மலையாளத்தில் டேக் ஆப், சி யூ சூன், மாலிக் என பஹத் பாசில் நடித்த படங்களை தொடர்ச்சியாக இயக்கி ஹிட் கொடுத்தவர்.

இவரை தமிழுக்கு இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார் கமல்ஹாசன். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் அப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button