சில படங்களுக்கு வசனகர்த்தாவாக பணியாற்றிய கே எஸ் பழனி முதல் முறையாக இயக்கியுள்ள படம் ‘காசு மேலே காசு’.
நடிகர்கள்: ஷாருக், காயத்ரி, மயில்சாமி, கோவை சரளா, நளினி, மதுமிதா, லொள்ளுசபா சாமிநாதன் இவர்களுடன் இயக்குனர் கே எஸ் பழனி சாமி.
தயாரிப்பு: ராகவ் மூவி எண்டர்டெய்ன்மெண்ட் P.ஹரிஹரன்
இசை: பாண்டியன்,
ஒளிப்பதிவு: சுரேஷ்தேவன்
பாடல்கள்: கருப்பையா
கதை:
மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சார்ந்த மயில்சாமிக்கு நாயகன் ஷாருக் மகன். தன் மகன் ஷாருக்கை எப்படியாவது பெரிய இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்து சம்மந்தியின் சொத்தில் ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து விட வேண்டும் என்ற பணத்தாசை பிடித்தவர் மயில்சாமி.
இதனால் தன் மகன் ஷாருக்கை கே எஸ் பழனியின் மகளாக வரும் நாயகி காயத்ரியை வலுக்கட்டாயமாக காதலிக்க வைக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க, காயத்ரி யார் என்பது ஹீரோ ஷாருக்கிற்கு தெரிய வர, அதன் பிறகு நடக்கும் சில பல கலாட்டக்களே படத்தின் மீதிக் கதை.
நடிப்பு:
மயில்சாமியின் காமெடியும், கே எஸ் பழனிச்சாமியின் காமெடியும் படத்திற்கு மிகப்பெரிய பலம். ஆரம்பத்தில் பாடல்கள் சிறிது சோடலை கொடுத்தாலும், அதன் பிறகு ஆரம்பிக்கும் கலாட்டக்கள் திரையரங்குகளில் சிரிப்பலைகளை அள்ள வைத்து விடுகிறது.
நாயகன் ஷாருக் மற்றும் நாயகி காயத்ரி இருவரும் இன்னும் சற்று ஹெமிஸ்ட்ரியை கொடுத்திருக்கலாம். படத்திற்கு சற்று பலமாக இருந்திருக்கலாம்.
மூதேவி ப்ரதர்ஸ் என்று வரும் ரவுடிகள் நால்வரும் அடிக்கும் கூத்துகள் செம…
க்ளைமாக்ஸ் காட்சியில் வந்து சென்ற கோவை சரளா தனது அனுபவ நடிப்பால் அனைவரையும் ஓரங்கட்டி விடுகிறார்.
இது போன்ற கலகப்பான படங்கள் ஏனோ தமிழ் சினிமாவில் ஒதுக்கப்பட்ட படங்களாகவே வந்து சென்று விடுகின்றன.
சரியான திரையரங்குகள் கிடைக்காமலும், சரியான திரையிடல் திட்டமிடல் இல்லாமலும் தோல்வியை சந்தித்து விடுகின்றன.
குழந்தைகளோடு சென்று 2 மணி நேரம் வயிறு குலுங்க சிரித்துவிட்டு வர வேண்டிய படம். (முக்கிய குறிப்பு: ஒரு இடத்தில் கூட ஆபாசம் இல்லை)
ஆபாசம் இல்லா வார்த்தைகளாலும் நல்ல ஒரு காமெடி வசனத்தை எழுத முடியும் என்று நிரூபித்த இயக்குனர் கேஎஸ் பழனிக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்.
இன்னும் பல படங்கள் உங்கள் வசனங்களுக்காக காத்திருக்கின்றன இயக்குனரே..
காசு மேலே காசு – காமெடிக்கு மேல காமெடி….