Spotlightதமிழ்நாடு

அடுத்த வருடம் தமிழக முதல்வராக ரஜினி பொறுப்பேற்பார்.. பிரபலத்தின் ஆரூடம்!

தமிழகத்தின் அடுத்த முதல்வராக ரஜினி வாகை சூடுவார் என நடிகர் சாருஹாசன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவு, திமுக தலைவர் கலைஞரின் உடல்நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தின் அரசியல் தளத்தில் ஓர் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை தங்களாலே இட்டு நிரப்பிட முடியுமெனவும் பெருத்த நம்பிக்கை கொண்டு பல நடிகர்கள் அரசியல் கட்சிகளை துவக்கிவருகின்றனர்.

அவர்களை பலரும் ஆதிரித்தும், எதிர்த்தும் தங்களது கருத்துக்களை பதிவு செய்கின்றனர். தமிழ்த்திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் ஆகியோரும் அரசியலில் தங்களது ஈடுபாட்டை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடகத்தினை சேர்ந்தவராகத்தான் இருப்பார் என தெரிவித்துள்ளார் நடிகர் சாருஹாசன். கமலின் சகோதரர்தான் சாருஹாசன் என்பது கூடுதல் தகவல்.

Facebook Comments

Related Articles

Back to top button