
இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.
விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், அடுத்த படத்தை தனுஷை வைத்து இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனுஷின் 56வது படமாக அமையவிருக்கும் இப்படத்தினை ஐசரி கே கணேஷ் தயாரிக்கவிருக்கிறார்.
தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான கர்ணன் மிகப்பெரும் ஹிட் அடித்துள்ள நிலையில், மீண்டும் கைகோர்த்துள்ளதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதுமட்டுமல்லாமல், தேனி ஈஸ்வர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருப்பதாகவும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
Facebook Comments