Spotlightசினிமா

5 நிமிடத்திற்கு 35 லட்சம்; இது சமந்தாவுக்குதான்!

மிழ் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் தனக்கென ஒரு நிலையான மார்க்கெட் வைத்திருப்பவர் தான் சமந்தா. திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் இன்னமும் அவர் நடித்து தான் வருகிறார்.

கடைசியாக வெளிவந்த சூப்பர் டீலக்ஸ், மஜிலி திரைப்படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால் சமந்தா தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளார். மாமனார் நாகார்ஜூனாவின் மன்மதுடு-2வில் நடித்துவரும் இவருக்கு அப்படத்தில் வெறும் 5 நிமிட காட்சி தானாம்.

சிறப்பு தோற்றத்தில் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே இப்படத்தில் நடிக்கும் இவருக்கு ரூபாய் 35 லட்சம் சம்பளமாம். இந்த செய்தி வெளியானதில் இருந்து டோலிவுட்டில் இது பற்றிய பேச்சு தான். வேறு வழியின்றி சம்மதித்த படத்தின் தயாரிப்பாளர் அனைவரிடமும் இதை கூறி புலம்பிக் கொண்டு வருகிறாராம்.

Facebook Comments

Related Articles

Back to top button