ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த், லக்ஷ்மி மஞ்சு, M.S.பாஸ்கர், மனோபாலா, குமரவேல், மோகன்ராமன், உமா, பத்மநாபன், சீமா தனேஜா மற்றும் சிந்து ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிறது ‘காற்றின் மொழி’.
இப்படத்தில் RJ வாக நடிக்கிறார் ஜோதிகா. வரும் வெள்ளி அன்று இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. சினிமா ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற இந்த ட்ரெய்லர், தொடர்ந்து யூ-ட்யூப்பில் 2-வது இடத்தில் இருந்து வருகிறது.
இதுவரை, சுமார் 2.5 மில்லியன் (25 இலட்சம்) பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. ட்ரெய்லருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
BOFTA-வின் G.தனஞ்செயன், S.விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்செயன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.