Spotlightசினிமா

மிக பிரம்மாண்டமாக வெளியாகும் ‘கடாரம் கொண்டான்’!

ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ளது ‘கடாரம் கொண்டான்’. இப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

இப்படத்தை அதிக பொருட்செலவில் கமலஹாசன் தயாரித்துள்ளார். ஏற்கனவே படத்தின் டீசர், ட்ரெய்லர் என அனைத்தும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.

வரும், வெள்ளியன்று இப்படம் வெளியாக இருப்பதால் விக்ரம் ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை இப்போதே ஆரம்பித்து விட்டார்கள். படம் வெற்றி பெற வேண்டிபல இடங்களில், அன்னதானம் வழங்குவது, கோவில்களில் சிறப்பு பூஜை என நடைபெற்று வருகிறது.

இதுவரை காணாத லுக்-கில் விக்ரம் தோன்றுவதால் ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் படத்தை காண மிகவும் ஆர்வத்தில் உள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button