Spotlightவிமர்சனங்கள்

கமலி From நடுக்காவேரி – விமர்சனம் 3.5/5

ஞ்சை மாவட்டத்தில் நடுக்காவேரி என்ற கிராமத்தில் தனது பெற்றோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் கமலி(கயல் ஆனந்தி). 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவியான கமலி, 12 ஆம் வகுப்பில் மாநிலத்தில் முதல் இடம் பிடித்த ஒரு மாணவனை தொலைக்காட்சி வாயிலாக பார்த்து அவர் மீது காதல் கொள்கிறார்.

அந்த மாணவனை சந்திக்க வேண்டும், என்ற ஆர்வத்தில் அந்த மாணவன் சென்னை ஐஐடி’யில் படித்து வருவதை அறிந்து தானும் ஐஐடி’யில் சேர விரும்புகிறார்.

அதற்காக, அதே ஊரில் ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர் பிரதாப் போத்தன் அவரிடம் டியூசன் கற்றுக் கொள்கிறார். நன்றாக படித்து, நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுகிறார்.

தனது காதலனை காண, பல கனவுகளோடு சென்னை ஐஐடி’க்குள் காலடி எடுத்து வைக்கிறார் நடுக்காவேரி கமலி…

காதலுக்காக போன கமலியின் கல்வி என்ன ஆனது..?? காதலும் என்ன ஆனது.?? என்பதே படத்தின் மீதிக் கதை.


கமலியாக கயல் ஆனந்தி.. பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த போன்ற குறும்புத்தனமான, யதார்த்தமான கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார் கயல் ஆனந்தி. கமலி கதாபாத்திரத்தில் வேறு நடிகை யாரையும் யூகிக்க முடியாத ஒன்று.

குறும்புத்தனம், காதல், சோகம், விரக்தி, என பல கோணத்தில் பல விதமான முக பாவனையோடு கலக்கியிருக்கிறார்.

படத்திற்கு மிகப்பெரும் பலம் பிரதாப் போத்தன்… தனது அனுபவ நடிப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். நுழௌவுத் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளின் அச்சத்தை போக்கவும் ஒரு சில டிப்ஸ்களையும் இதன் வாயிலாக கூறுவதும் சிறப்பு..

கமலின் தோழியாக வரும் ஸ்ரீஜாவின் நடிப்பு யதார்த்தம். கலகலவென்று துள்ளி குதித்து கதாபாத்திரமாக வாழ்ந்து சென்றிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், அபிதா வெங்கட், என தேர்ந்தெடுக்க கதாபாத்திரங்கள் அனைத்தும் நச்..

ஆகபெரும் வாழ்த்துகள் இயக்குனர் ராஜசேகர் துரைசாமி அவர்களுக்கு..

யாரும் தொடாத கதையை எடுத்து, அதிலும் நேர்த்தியான திரைக்கதையை அமைத்து கமலியோடு நம்மையும் பயணம் புரிய வைத்திருக்கிறார்.

பருவ வயதில் வரும் காதலா..?? கற்றுத் தந்த ஆசானா.? என தவிக்கும் கமலி எடுத்த முடிவு அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் பாடம்.

தீன தயாளனின் இசை இரயில் பயணத்தில் நம்மோடு வரும் மரங்கள் போல, கதையோடு பயணம் செய்கிறது.

ஜெகதீசனின் ஒளிப்பதிவு கலர்புல். நடுக்காவேரி கொள்ளை அழகை மணம் மாறாமல் திரையில் கொண்டு வந்திருக்கிறார் ..

முதல் பாதியில் சற்று விறுவிறுப்பை ஏற்றியிருந்தால் இன்னும் ரசிக்க வைத்திருப்பாள் கமலி.

கமலி From நடுக்காவேரி – பருவத்தின் பாடம்… கொண்டாடலாம்.

Facebook Comments

Related Articles

Back to top button