Spotlightஇந்தியாதமிழ்நாடு

ஒவ்வொரு இந்தியருக்கு தடுப்பூசியை கொண்டு சேர்ப்பதே அரசின் இலக்கு – பிரதமர் மோடி உரை!!

ஒவ்வொரு இந்தியருக்கு தடுப்பூசியை கொண்டு சேர்ப்பதே அரசின் இலக்கு – பிரதமர் மோடி உரை

கொரோனா நேரத்தில் 7வது முறையாக மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் மோடி. அவரது உரையில் அவர் கூறியிருப்பதாவது

நாட்டின் நிலைமை ஸ்திரதன்மையோடு உள்ளது. நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக மேம்பட்டு வருகிறது. நாடு கொரோனா பதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வருகிறது. கொரோனா பாதிப்பு குறைந்தாலும், ஆபத்து இன்னும் முழுமையாக நீங்கவில்லை. அமெரிக்கா, பிரான்சு உள்ளிட்ட நாடுகளில் 2வது அலையாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை வருவதால் மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். வீடுகளில் இருந்து வெளியே வருவோர் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். வெளிநாடுகளை விட இந்தியாவில் மக்களை காக்கும் முயற்சியில் மத்திய அரசு வெற்றி கண்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்காக 90 லட்சத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் தயார். பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளன. தடுப்பூசி கண்டறியப்பட்டு விநியோகிக்கப்படும்  வரை மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தடுப்பூசி கண்டறியப்பட்டு உலக நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டறிவதில் மும்முரமாக உள்ளது. இந்தியாவும் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியருக்கும் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய விஞ்ஞானிகள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தடுப்பூசியை மக்களுக்கு வினியோகிக்க தேவையான திட்டத்தை மத்திய அரசு வைத்துள்ளது.

பல தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளன. ஒவ்வொரு இந்தியருக்கு தடுப்பூசியை கொண்டு சேர்ப்பதே அரசின் இலக்கு.

ஊடகங்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும் பணியில் ஈடுபட வேண்டும்.

Facebook Comments

Related Articles

Back to top button