
பா ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது “பரியேறும் பெருமாள்”. ஹீரோவாக கதிரும் ஹீரோயினாக ஆனந்தியும் நடித்திருக்கிறார்கள்.
விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும். வசூல் இருக்கிறதா என்றால் இல்லை என்கிறார்கள் படக்குழுவினர். இதற்கு காரணம் பல்வேறு மல்டி பிளக்ஸில் ஒரு காட்சி மட்டுமே பரியேறும் பெருமாள் படத்திற்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்துப் பதிவிட்ட படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித், மக்களின் பேராதரவினால் திரையரங்குகளும் காட்சிகளும் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுவரை 121 திரையரங்குகளாக அதிகரித்துள்ளது. இன்னும் திரையரங்குகள் அதிகரிக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Facebook Comments