
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, கவுரி கிஷன், சாந்தனு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் படம் மாஸ்டர்.
இதன் சூட்டிங் சென்னை பூந்தமல்லியில் இருக்கும் மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் நடைப்பெற்றது. பின்னர் டில்லி, ஷிமோகா சிறைச்சாலைகளிலும் நடைபெற்றது.
தற்போது, சென்னை பனையூரில் பிரம்மாண்ட செட்கள் போடப்பட்டு அங்கும் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாஸ்டர் படம், கொரிய படமான சைலன்ஸ்டு என்ற பட தழுவல் என கூறப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் நடக்கும் பாலியல் தொல்லைகளை பற்றி மாஸ்டர் தெரிந்துக் கொண்டபின் அவர்களை எப்படி வில்லனிடம் இருந்து காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை என சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே லோகேஷ் இயக்கிய கைதி படம் விருமாண்டி படத்தின் தாக்கம் என கூறியிருத்தார்.
Thalapathy Vijays Master movie inspired by Korean film Silenced




