Spotlightதமிழ்நாடு

தூத்துக்குடியை அசத்தும் ’பனை கொட்டான் பிரியாணி’!

னிதன் நாளுக்கு நாள் உழைத்து உழைத்து சேர்த்த பணம் எதற்காக.? எல்லாம் ஒரு சான் வயித்துக்காக என்று கூறுவார்கள்.

அந்த வயிற்றுக்கு பசியார உணவு படைப்பது என்பது தெய்வத்திற்கு சமமானவர்கள். அந்த உணவை நாவில் சுவையேற படைப்பதற்கும் ஒரு பக்குவம் வேண்டும்.

கிராமத்து இயற்கையில் மண் வாசனை மாறாமல் உணவு தயாரிப்பது என்பது அரிதிலும் அரிதாகி விட்ட இக்காலகட்டத்தில், அம்மியில் அரைத்தல், விறகு அடுப்பு, பனை ஓலை கொட்டானில் பார்சல், ஓலை பெட்டியில் சோறு, மண் பானையில் மீன் குழம்பு என்று மீண்டும் நம்மை கிராமத்து பக்கம் திருப்பியிருக்கிறார்கள் இவர்கள்.

யார் இவர்கள்.?

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கற்குளம் கிராமத்தில் தனக்கேற்ற கை வண்ணத்தில், மண் வாசனை மாறாமல் உணவுகளை தயார் செய்து வருகிறார் சண்முகநாதன் என்பவர்.

தூத்துக்குடி, ஆறுமுகநேரி, சாயர்புரம், திருநெல்வேலி, ஏரல், என சுற்றுவட்டார பகுதிகளில் கிளை அமைத்து தனது இயற்கை வாசனை உணவை மிகவும் குறைவான விலையில் வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த காலத்தை நினைவூட்டும் விதமாகவும், தரமும் தரமாக இருப்பதாக அநேக மக்கள் இந்த உணவை நாடி வருகின்றனர்.

ஏன் இன்னும் யோசிச்சிட்டு இருக்கீங்க… கால் பண்ணுங்க.. ஆர்டர் பண்ணுங்க..

Facebook Comments

Related Articles

Back to top button