
விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர், மிர்னா, டீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி ஆர் வரலட்சுமி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் பர்த் மார்க்.
உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.
ஸ்ரீராம் சிவராமன், விக்ரம் ஸ்ரீதரன் தயாரித்திருக்கிறார்கள்.
இராணுவ வீரரான ஷபீர் மிர்னாவை திருமணம் செய்து கொள்கிறார். 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவியை இயற்கை முறையில் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுப்பதற்காக ஒரு கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
கேரளா அருகேயுள்ள ஒரு மலைகிராமம் அது. பெரிதான சாலை வசதியோ எதுவும் இல்லாத அக்கிராமத்தில் சுகப்பிரசவம் அடைவதற்காக எளிதான உடற்பயிற்சியை மிர்னாவிற்கு கொடுத்து வருகின்றனர் அங்குள்ளவர்கள்.
தொடர்ந்து பயிற்சி பெற்று குழந்தை பெற்றெடுக்கும் மாதம் வரும் வேளையில், அந்த குழந்தையை கொல்ல நினைக்கிறார் ஷபீர்.
ஏன் அந்த குழந்தையை கொல்ல நினைக்க வேண்டும்.? சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தின் மிகப்பெரும் பலமே நாயகி மிர்னா தான்… ஒரு நிறை மாத கர்ப்பிணி என்ன மாதிரியான வலிகளை எதிர்கொள்வார்.? என்ன மாதிரியான இன்னல்களை எதிர்கொள்வார் என்பதை கண்முன்னே கொண்டு வந்து நம்மையும் கதையோடு பயணிக்க வைத்து அந்த வலியை நமக்குள்ளும் கடத்தி விட்டார் நாயகி மிர்னா.
குழந்தை பிரசவிக்கும் காட்சிகளில் நடிப்பின் உச்சத்திற்கு சென்று விட்டார் நாயகி மிர்னா. நம் கண்களை சில இடங்களில் குளமாக்கியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், நாயகன் ஷபீரும் தனது திறமையை பல இடங்களில் நிரூபித்திருக்கிறார். சிறு வயதில் தான் பட்ட ஒரு சில வலியை அவ்வப்போது எண்ணி ஏங்கும் காட்சிகளில் ஒரு ஃபீலை கொடுத்துவிட்டார் ஷபீர்.
க்ளைமால்ஸ் காட்சிகளில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார் ஷபீர்.. மற்றபடி படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்டதை அழகாக செய்து முடித்திருக்கிறார்கள்.
விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பெரிதாக கைகொடுருக்கிறது. ஒரு சில வசனங்கள் க்ளாப்ஸ் பெறுகின்றன.
ஒளிப்பதிவு காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. பிரசவத்தில் பெண்கள் படும் இன்னல்களை கண்முன்னே கொண்டு வந்து சேர்த்ததற்காக இயக்குனருக்கு பெரும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளலாம்.,.
பர்த் மார்க் – வலி





