Spotlightவிமர்சனங்கள்

பேபி & பேபி – விமர்சனம் 3.25/5

யக்குனர் பிரதாப் இயக்கத்தில் ஜெய், யோகி பாபு, சத்யராஜ், பிரக்யா, சாய் தன்யா, ரெடின் கிங்க்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், இளவரசு, சிங்கம்புலி, ஸ்ரீமன், நிழல்கள் ரவி, கீர்த்தனா, விஜய் டிவி ராமர், விஜய் டிவி தங்கதுரை, சேசு, கல்கி ராஜா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “பேபி & பேபி”.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சாரதி. மேலும், இசையமைத்திருக்கிறார் டி இமான்.

படத்தினை யுவராஜ் தயாரித்திருக்கிறார்.

கதைக்குள் பயணிக்கலாம்…

கோயம்புத்தூரில் ஜமீன் குடும்பத்தைச் சார்ந்த சத்யராஜுக்கு மகனாக வருகிறார் ஜெய். தனது கிராமத்தைச் சேர்ந்த பிரக்யாவை காதல் திருமணம் செய்து கொள்கிறார். இந்த திருமணத்திற்கு சத்யராஜ் எதிர்ப்பு தெரிவிக்க, தனது தந்தைக்கு பயந்து வெளிநாட்டிற்கு சென்று விடுறார்கள் இருவரும்.

அதேசமயம், ஜமீனுக்கு ஒரு ஆண்வாரிசு இல்லையே என்று கவலையில் இருக்கிறார் சத்யராஜ். இந்தசமயத்தில், ஜெய்க்கு ஆண்குழந்தை பிறந்திருப்பதாக சத்யராஜுக்கு தகவல் கிடைக்க, ஜெய் மீது இருந்த கோபம் அனைத்தையும் மறந்து, உடனே ஜெய்யை குழந்தையோடு ஊருக்கு கிளம்பி வர சொல்கிறார் சத்யராஜ்.

இதனால் தனது ஊருக்குச் செல்ல விமான நிலையம் வருகிறார்கள் ஜெய், ப்ர்க்யா மற்றும் குழந்தை.

அதேசமயம், மற்றொரு பக்கம்

ஜாதகம், சாஸ்திரம் என்று ஊறிபோய் இருப்பவர் தான் இளவரசு. இவரது மகனாக வருபவர் யோகி பாபு. ஜாதகத்தில் வெளிநாட்டில் சென்று வேலை பார்க்க வேண்டும் என்று இருப்பதாகக் கூறி யோகிபாபுவை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து விடுகிறார் இளவரசு.

வெளிநாட்டில் சாய் தன்யாவை திருமணம் செய்து கொள்கிறார் யோகிபாபு. திருமண விஷயத்தை கேள்விப்பட்டதும் கோபமடைகிறார் இளவரசு. வீட்டிற்கு ஒரு பெண்குழந்தை இருந்தால் மட்டுமே குடும்பம் செழிக்கும் என்று ஜாதகத்தில் இருப்பதாக ஒருவர் கூற, இளவரசு கவலையில் இருக்கிறார்.

அச்சமயம், யோகிபாபுவிற்கு பெண்குழந்தை பிறக்க, மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார் இளவரசு. உடனே குழந்தையை அழைத்துக் கொண்டு யோகிபாபுவை கிராமத்திற்கு வரச் சொல்கிறார் இளவரசு.

கிராமத்திற்குச் செல்ல தனது கைக்குழந்தை மற்றும் மனைவியுடன் ஏர்போர்ட் வருகிறார் யோகிபாபு.

அங்கு எதிர்பாராத விதமாக ஜெய் குழந்தை மற்றும் யோகிபாபுவின் குழந்தை மாறிவிடுகிறது. விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது தான் குழந்தை மாறிவிட்டது என்றறிந்து அனைவரும் கதற, குழந்தையை இருவரும் கைமாற்றிக் கொண்டார்களா.?? குழந்தையை கடத்தத் துடிக்கும் நபர்கள் யார்.? எதற்காக கடத்த நினைக்கிறார்கள் என்ற கேள்விகளுக்கெல்லாம் இரண்டாம் பாதியில் விடை இருக்கிறது.

மற்ற படங்களை காட்டிலும், இப்படத்தில் ஜெய் சற்று நடிப்பில் மீட்டரை குறைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். நடிக்க வேண்டும் என்று கடமைக்கு வந்து நடித்தது போன்ற ஒரு உணர்வை கொடுத்து விட்டார். படத்தில் இரண்டு சண்டைக் காட்சி இருக்கிறது. இரண்டிலுமே துளி அளவிற்கும் சம்மந்தமில்லாத மாஸ் காட்சிகளை கொடுத்திருக்கிறார்கள்.

நாயகிகளான பிரக்யா மற்றும் சாய் தன்யா இருவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவோடு வந்து செய்து முடித்திருக்கிறார்கள்.

சத்யராஜ் தனது அனுபவ நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இளவரசு நடிப்பில் நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்.

மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை, ராமர் மற்றும் ஆனந்தராஜ் உள்ளிட்ட நடிகர்களும் கொடுக்கப்பட்டதை தெளிவாக செய்து முடித்திருக்கிறார்கள். இன்னும் சற்று காமெடி கணைகளை அள்ளி தெளித்திருக்கலாமே என்றும் கூற தோன்றியது.

மற்ற நடிகர்கள் கொடுத்த நகைச்சுவையைக் கூட யோகிபாபுவால் கொடுக்க முடியவில்லை. காமெடிக்கென்று இன்னும் சற்று அதிகப்படியான மெனக்கெடலை படத்தில் கொடுத்திருந்திருக்கலாம்.

திரைக்கதையில் இன்னும் சற்று கூடுதல் கவனத்தை செலுத்தியிருக்கலாம். இசை மற்றும் ஒளிப்பதிவு பெரிதாகவே பங்களித்திருக்கிறது.

மொத்ததில்,

பேபி & பேபி – ஒருமுறை பேமிலியோடு விசிட் அடிக்கலாம்…

Facebook Comments

Related Articles

Back to top button