Spotlightசினிமா

25வது நாளில் சர்தார்.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கார்த்தி!

பி எஸ் மித்ரன் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் சர்தார்.

படம் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்றது. வெளியான நாள் முதல் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது படக்குழுவினரை மகிழ்ச்சியில் உச்சத்தில் ஆழ்த்தியது.

ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலை வாரிக் குவித்திருப்பதாகவும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தனர்.

மகிழ்ச்சியான தயாரிப்பாளர் இயக்குனர் மித்ரனுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாகவும் அளித்தார். பல திரையரங்குகளில் சர்தார் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. திரையரங்கு உரிமையாளர்களில் ஆரம்பித்து விநியோகஸ்தரர்கள் வரை அனைவருக்கும் லாபம் ஈட்டிய படமாகவும் சர்தார் அமைந்துள்ளது.

இந்நிலையில், இப்படம் இன்று 25 நாளை எட்டியுள்ளதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் கார்த்தி.

இதற்காக நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தினை கொண்டாடிய ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button