
ஸ்ரீதேவி மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர்கள் ஹரி ஷங்கர் மற்றும் ஹரீஷ் இயக்கத்தில் உருவாகி கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் யசோதா.
இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சமந்தா. விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் படம் பெரிதும் பாராட்டப்பட்டதால் படத்திற்கு பெரிதும் வரவேற்பு கிடைத்த நிலையில், திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.
தொடர்ந்து பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், படம் வெளியாகி வெறும் மூன்று நாட்களில் மட்டும் சுமார் 20 கோடி ரூபாய் வரை வசூலை வாரிக்குவித்திருப்பதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ள்து.
தனித்துவமான கதை, நேர்த்தியான திரைக்கதை என படத்திற்கு இரண்டுமே பக்கபலமாக இருந்ததால் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.
தமிழகத்தில் சக்திவேல் ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.