
ஞானமுத்து பட்டறை & ஒயிட் நைட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி – பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வருகிறது ‘டிமாண்டி காலனி 2’.
இதன் முதல் பார்வை தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
படத்தின் 40% படப்பிடிப்பு முதல் ஷெட்யூலுடன் முடிவடைந்து அடுத்த ஷெட்யூல் விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது. படத்தின் வேலைகள் விரைவாக நடந்து கொண்டிருப்பதற்கு ஒட்டுமொத்த படக்குழுவின் ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் இயக்குநர் அஜய் ஞானமுத்துவும் & படத்தின் தயாரிப்பாளரும் நன்றி தெரிவித்துள்ளனர்.
‘டிமாண்டி காலனி2’ படத்தின் டேக்காக ‘Vengeance of Unholy’ பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அருள்நிதி, பிரியா பவானி சங்கர் ஆகியோர் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:
இசை: சாம் சிஎஸ்,
ஒளிப்பதிவு: தீபக் D மேனன்,
படத்தொகுப்பு: குமரேஷ் D,
கலை இயக்கம்: ரவி பாண்டி,
சண்டைப் பயிற்சி: கணேஷ்,
ஆடை வடிவமைப்பு: நவதேவி ராஜ்குமார் & மாலினி,
அஜய் ஞானமுத்துவின் ஞானமுத்து பட்டறை மற்றும் விஜய் சுப்ரமணியனின் ஒயிட் நைட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து ‘டிமாண்டி காலனி2’ திரைப்படத்தைத் தயாரிக்கிறது.





