Spotlightவிமர்சனங்கள்

லிசா – விமர்சனம் 3/5

ஞ்சலி தனது தாயுடன் சென்னையில் வசித்து வருகிறார். தனது அம்மாவோடு பிரிந்து இருக்கும் தனது தாத்தா பாட்டியை சேர்த்து வைக்க எண்ணுகிறார் அஞ்சலி.

இதற்காக தனது பாய் பிரண்ட் சாம் ஜோன்ஸோடு மலைக்காட்டிற்கு சென்று தனது தாத்தா பாட்டியை காணச் செல்கிறார் அஞ்சலி.

அங்கு இருக்கும் இருவரிடமும் நன்றாக உறவாடுகிறார் அஞ்சலி. சில அமானுஷ்ய சக்திகள் அங்கு அஞ்சலி மற்றும் சாம் ஜோன்ஸை பயமுறுத்துகின்றன.

திடீரென ஒருநாள் அந்த வீட்டில் அழுகிய நிலையில் இருக்கும் 4 எலும்புக் கூடுகளை காண்கிறார் அஞ்சலி.

அதன்பிறகு நடக்கும் முடிவுகளே படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள்.

அஞ்சலி தனது கதாபாத்திரத்தை சிறப்பாக பூர்த்தி செய்துள்ளார். அழகோடு மிரட்டலையும் கலந்து கொடுத்ததால் மேலும் சிறப்பு.

சாம் ஜோன்ஸின் நடிப்பையும் பெரிதாக பாராட்டலாம்.

படத்தின் சற்று பலமாக இருந்தது, யோகி பாபு மற்றும் பிரம்மானந்தம் மட்டுமே. இருவரின் காமெடி காட்சிகளில் திரையரங்குகள் சிரிப்பலைகளில் துள்ளி குதிக்கின்றன.

இயக்குனர் ராஜு வசந்தின் 3டி முயற்சிக்கு பெரிதாக பாராட்டுகளை தெரிவித்தாலும், திரைக்கதை ஓட்டத்தை சரியாக கணிக்காமல் போனது ஏமாற்றம் தான்.

க்ளைமேக்ஸ் காட்சிகளில் வைத்த செண்டிமெண்ட் காட்சிகள் கைதட்ட வைக்கின்றன.

சந்தோஷ் தயாநிதியின் பின்னனி இசை மிரட்டல்.

லிசா – எட்டிப்பார்க்கும் பேயோடு அஞ்சலியை சேர்த்து ரசிக்கலாம்…

Facebook Comments

Related Articles

Back to top button