Spotlightதமிழ்நாடு

அண்ணா அணிவித்த மோதிரத்துடனே கருணாநிதி உடல் அடக்கம்!!

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவரது  உடல் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஏராளமான திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் துக்கம் தாங்காமல் கண் கலங்கினர். இதனிடையே திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணா அணிவித்த மோதிரத்துடனே அடக்கம் செய்யப்பட்டது.

1959-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்று மேயர் பதவியை கைப்பற்றியது. திமுகவின் இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர் கருணாநிதி. எனவே கருணாநிதிக்கு அண்ணா தங்க மோதிரம் ஒன்றை பரிசாக அணிவித்தார். அண்ணா அணிவித்ததால் அந்த மோதிரத்தை ஒருபோதும் கழட்டியதே இல்லை கருணாநிதி.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் கருணாநிதியின் அந்த மோதிரம் கழட்டப்படவில்லை. கருணாநிதி உடலோடு ஒன்றாகிவிட்ட அந்த மோதிரம் அவர் உடல் அடக்கம் செய்யப்படும்போதும் கழட்டப்படவில்லை. அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய திமுக நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்றது.

அதைப்போல அண்ணா அணிவித்தை மோதிரத்தை கழட்டாமலே கருணாநிதி உடலை அடக்கம் செய்தனர்.

Facebook Comments

Related Articles

Back to top button