
தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை பற்றி ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் சிறப்பு பதிவு செய்துவிட்டு இன்று அதிகாலை இந்தியா திரும்பினார் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி.
அவரை பெங்களூர் விமான நிலையத்தில் போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர் மீது வழக்குகள் பல இருக்கின்றன என காரணம் காட்டப்பட்டுள்ளது.
மேலும், வரும் ஞாயிறு அன்று பெங்களூரில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பெங்களூர் விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார் குறிப்பிடத்தக்கது.
Facebook Comments