Spotlightசினிமா

பூஜையுடன் துவங்கியது ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’!

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் விரைவில் உருவாக இருக்கிறது ‘காற்றின் மொழி’. இப்படத்தினை பாஃப்டா மீடியா நிறுவனத்தின் சார்பாக G. தனஞ்ஜெயன் , S விக்ரம் குமார் , லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கிறார்கள்.

சுமார் பத்து வருடத்திற்க்கு பின்னர் ஜோதிகா மற்றும் இயக்குநர் ராதா மோகன் கூட்டணி மீண்டும் “ காற்றின் மொழி “ படத்தில் இணைகிறது. ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற துமாரி சுலு திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் சிறிய மாற்றங்களோடு உருவாகவுள்ளது.

இப்படத்தின் பூஜை படக்குழுவினர் மங்களகரமாக ஜூன் 4 அன்று நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் கலந்துகொண்டு மேலும் சிறப்பு சேர்த்தார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறவுள்ளது.

இப்படத்தில் விதார்த் , லட்சுமி மஞ்சு , M.S. பாஸ்கர் , மனோபாலா , குமாரவேல் , மோகன் ராமன் , உமா பத்மநாபன் , சீமா தனேஜா , சிந்து மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இசை A.H. காஷீப் , பாடல் மதன் கார்க்கி , கேமரா மகேஷ் முத்துசாமி , கலை கதிர் , உடை பூர்ணிமா , எடிட்டர் பிரவீன் KL , வசனம் பொன் பார்த்திபன்.

அக்டோபர் 2018 வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button