நடிகர் சண்முக பாண்டியன் “மதுரவீரன்” திரைப்படம் வெளியானபோது வெளிநாட்டில் இருந்த காரணத்தினால் தனது ரசிகர்களை சந்திக்க முடியவில்லை, சில நாட்களுக்கு முன்பு தான் சென்னை வந்தார் சண்முகபாண்டியன்.
அப்போது சண்முகப்பாண்டியனிடம் ரசிகர்கள் நேரில் சந்தித்து புகைப்படம் எடுக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தனர்,தனது ரசிகர்களின் வேண்டுகோளுக்காக இன்று தனது ரசிகர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார்.அப்போது ஆயிரகணக்கான ரசிகர்கள் அவரை சந்தித்து வாழ்த்து கூறி புகைப்படம் எடுத்துக்கொண்டனர் .
இந்த சந்திப்பின் இறுதியில் மதுரவீரன் படக்குழுவினரும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி மதுரவீரன் 75ம் நாள் வெற்றிக்கான விருதை வழங்கி கௌரவித்தனர், பின்பு படக்குழுவினர் கேப்டன் விஜயகாந்த் மற்றும் பிரபாகரனுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர் .
Facebook Comments