Spotlightசினிமாதமிழ்நாடு

கொரோனா பாதிப்பு; சுகாதார கருவிகளை வழங்கிய நடிகர் வசந்த் ரவி!

‘தரமணி’ படத்தில் நடித்த நடிகர் வசந்த் ரவி கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு நிவாரணமாக தொழிலாளர்களுக்கு சுகாதார கருவிகளை வழங்கியிருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது ,‘ இந்தப் பருவத்தில் வாழ்க்கையே மாறிவிட்டது. இது நல்லதா கெட்டதா என்பது தெரியாது புரியாது. ஆனால் இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம். முக்கியமான பாதுகாப்பாக இருப்போம்.

நமது அரசாங்கம், என்.ஜி.ஓ.க்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் வெற்றி மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.

இதைப் பார்க்கும்போது இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை வருகிறது.

ஆனால், சென்ற வாரம் நான் மளிகை கடைக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது, அந்த பாதையில் தூய்மை பணியாளர்கள், முகமூடி மற்றும் கையுறைகள் இல்லாமல் இருந்தார்கள். அதைப் பார்க்கும் போது நான் மிகவும் வருந்தினேன்.

இது போன்று நெருக்கடியான நேரத்தில் நமக்காக நமது தெருவை சுத்தமாக வைத்திருக்கும் இந்தத் தொழிலாளர்கள் எந்தவித பாதுகாப்பு கவசமும் இன்றி பணியாற்றுகிறார்கள்.

ஆகையால், அவர்களுக்கு உரிய சுகாதார கருவிகளை சென்னை கார்ப்பரேஷன் கமிஷனரிடம் வழங்கினேன்.

இதுபோல், உங்கள் பகுதியை சுத்தமாக வைத்திருக்கும் சுகாதார பணியாளர்களுக்கு உங்களால் முடிந்த கருவிகளை வழங்குங்கள்.’ என்று கூறினார்.

நடிகர் வசந்த் ரவி, சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் ஜி.பிரகாஷ் ஐ.ஏ.எஸ்-ஐ சந்தித்து 1000 சுகாதார கருவிகளை (கையுறைகள், முகமூடிகள் மற்றும் துப்புரவாளர்கள்) வழங்கினார்.

Facebook Comments

Related Articles

Back to top button