ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஓ எம் ஆர் ஃபுட் ஸ்ட்ரீட் உடனான கூட்டாண்மையுடன், 15 ஆகஸ்ட் அன்று நாவலூரில் நடைபெற்ற விழாவில் HP கேஸ் அப்பு சிலிண்டர்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்த வகை அப்பு சிலிண்டர்களை OMR ஃபுட் ஸ்ட்ரீட் அவுட்லெட்டுகளில் வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக விழாவில் LPG, HPCl பொது மேலாளர் திருமதி.எஸ்.அம்பாபவானி குமார், திருமதி. பத்மினி சாவாலி, திருமதி. கெளஷிக் ராய் செளத்ரி, ஆகியோர் பங்கு கொண்டனர்.
ஒரு சிறிய அளவிலான, கையடக்கமான, சிக்கல்கள் அற்ற இந்த வகை கேஸ் சிலிண்டர்கள் 5கிகி அளவு கொண்டவை. முன்பதிவு இல்லாமல் எளிதாக மக்களுக்கு கிடைக்கும்படியாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவும் இந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எளிதில் ரீஃபில் செய்யும் வழிவகையும் செய்யப்பட்டுள்ளது. ரீஃபில் செய்யும் போது எரிபொருளுக்கான விலையை மட்டும் செலுத்தினால் போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிலிண்டர்களை HPCL-ன் வினியோகஸ்தர்கள் அல்லது OMR ஃபுட் ஸ்ட்ரீட் போன்ற அதன் பல்வேறு விற்பனை அமைவிடங்களிலும் வாங்கலாம்.