
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், கொரோனாவின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘ தமிழக அரசிடம் 2,501, தனியாரிடம் 870 என மொத்தம் 3,371 வெண்டிலேட்டர்கள் கையிருப்பில் உள்ளன.
68 ஆயிரம் பி.சி.ஆர் கருவிகள் கையிருப்பு உள்ளது.
ஆகவே, தமிழக அரசிடம் போதுமான அளவிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளன.
இன்று, தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. தமிழக அரசின் தொடர் நடவடிக்கையால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 180 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 1267 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் அனைவரும் குணமடைந்து வீட்டிற்கு சென்று விடுவார்கள். தமிழகம் விரைவில் பூஜ்ஜியம் என்ற நிலையை எட்டும்.
தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் புயல், சுனாமி வந்தாலும் குறை சொல்லிக்கொண்டே தான் இருப்பார்.’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.





