Spotlightசினிமாவிமர்சனங்கள்

லவ் – விமர்சனம் 2.5/5

மொழிமாற்றம் படங்களுக்கு வசனம் எழுதுவதில் கிங் மேக்கராக இருக்கும் ஆர் பி பாலா, தனது முதல் இயக்கமாக “லவ்” என்ற படத்தை இயக்கியிருக்கிறார். பரத், வாணி போஜன், விவேக் பிரசன்னா, டேனி, ஸ்வயம் சித்தா, ராதாரவி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் விமர்சனத்தை பார்த்து விடலாம்.

தொழிலில் பெரிதான ஒரு வெற்றியைபெற முடியாமல் ஓடிக் கொண்டிருக்கிறார் பரத். இந்த சூழலில் மிகப்பெரும் செல்வந்தரான ராதாரவியின் மகளான வாணி போஜனை திருமணம் செய்து கொள்கிறார்.

தொழிலில் உச்சம் தொடும்வரை, குழந்தை வேண்டாம் என்று கூறிவிடுகிறார் பரத். வருடங்களும் ஓடி விட, இருவருக்குள்ளும் எப்போதும் சண்டை வருகிறது. இச்சூழலில், வாணி போஜன் கர்ப்பமாகி விடுகிறார்.

அப்போது, ஏற்படும் சண்டையில் வாணிபோஜனை பரத் வேகமாக தள்ளிவிட வாணிபோஜன் இறந்துவிடுகிறார். செய்வதறியாது திகைத்து நிற்கிறார் பரத். அதன் பிறகு என்ன நடந்தது.? இருவருக்குள்ளும் இவ்வளவு கோபம் வருவதற்கு என்ன காரணம்.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

காதல், எமோஷன்ஸ், என வரும் காட்சிகளிலெல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார் பரத். வாணி போஜனுடனான சண்டைக் காட்சிகளை மிகவும் தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார்கள். வாணி போஜன் தனக்கான காட்சிகளில் அசத்தியிருக்கிறார். அழகிலும்…

படம் ஆரம்பித்த உடனே இடைவேளை வருகிறது. கதையில் என்னதான் சொல்ல வருகிறார்கள் தலைசுற்ற வைத்துவிட்டார்கள். படத்திற்கு சற்று ஆறுதல் என்றால் பி ஜி முத்தையாவின் ஒளிப்பதிவு ஒன்றே என்று கூறலாம். காட்சிகள் ஒவ்வொன்றையும் அவ்வளவு மெனக்கெடல் செய்து காட்சிப்படுத்தியிருக்கிறார் பி ஜி முத்தையா. ,

ஒரு வீட்டிற்குள்ளே மொத்த படத்தையும் எடுத்திருக்கிறார்கள். படத்தின் க்ளைமாக்ஸில் ட்விஸ்ட் காட்சிகள் இருந்தாலும், கதை நமக்குள் ஒட்டாமல் இருப்பதால், அதை ஏற்றுக் கொள்ளும்படியாகவும் இல்லை.

விவேக் பிரசன்னாவின் காட்சிகள் ஏனோதானோவென்று நகர்கிறது. சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் படம் எடுக்க முற்பட்டிருக்கிறார்கள்.,

இசையமைப்பாளர் ரோனி ரஃபேல்  இசையில் பின்னணி இசை கதையோடு பயணம்..

இன்னும் அதிகமான மெனக்கெடலை லவ்’வுக்கு கொடுத்திருக்கலாம்.

லவ் – அது எங்க இருக்கு…

Facebook Comments

Related Articles

Back to top button