Spotlightசினிமாவிமர்சனங்கள்

லக்கி மேன் – விமர்சனம் 3.5/5

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு, வீரா, ரேச்சல் ரபேகா, அப்தூல், ஆர் எஸ் சிவாஜி, ஜெயக்குமார், உள்ளிட்ட நட்சத்திரங்களின் இயக்கத்தில் உருவாகி வெளிவர இருக்கும் திரைப்படம் தான் லக்கி மேன்.

கதைப்படி,

சிறுவயதில் இருந்தே தான் தொட்ட இடமெல்லாம் கெட்டதாக நடக்கிறது எனக் கூறி, தன்னை அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று எண்ணி வாழ்கிறார் யோகி பாபு. இவருக்கும் ரேச்சல் ரபேகா மனைவியாக வருகிறார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

தனியார் ரியல் எஸ்டேட் கம்பெனியில் இடைத் தரகராக பணியாற்றி வரும் யோகிபாபு ஒரு ஏழ்மையான வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார். நாம் இப்படி இருப்பதற்கு அதிர்ஷ்டம் தான் காரணம் என்று புரிந்து கொண்டிருக்கிறார் யோகிபாபு.

அச்சமயத்தில், சிட் பண்ட் நிறுவனத்தில் யோகிபாபு மாத மாதம் பணம் செலுத்தி வருகிறார். அந்த சிட் பண்ட் நிறுவனத்தில் யோகிபாபுவிற்கு குலுக்கல் முறையில் கார் ஒன்று பரிசாக விழுகிறது.,

தனது வாழ்வில் கிடைத்த முதல் அதிர்ஷ்டம் அந்த கார் தான் என்று அதை கொண்டாடுகிறார். கார் வந்த அதிர்ஷ்டம் யோகிபாபுவின் வேலையிலும் முன்னேற்றம் ஏற்படுகிறது. பணம் கொழிக்கிறது. வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் நேரத்தில் காரை யோரோ திருடிச் சென்று விடுகிறார்கள்.

யார் அந்த காரை திருடியது..?? கார் இழந்த பின் யோகிபாபுவின் வாழ்க்கை என்னவானது..?? மீண்டும் யோகிபாபுவின் கைக்கு அந்த கார் சிக்கியதா.??? என்பதே படத்தின் மீதிக் கதை.,

கதையின் நாயகனாக ஜொலித்திருக்கிறார் யோகிபாபு. காமெடி மட்டுமே வரும் என்று பலர் எண்ணிய வேளையில், இப்படியான பாத்திரத்திலும் நடிப்பேன் என்று நடித்து அதில் ஜெயித்து காட்டியிருக்கிறார் யோகிபாபு. ஒவ்வொரு காட்சியையும் சாதாரணமாக நடித்து அதில் வாழ்ந்து காட்டிச் சென்று விடுகிறார் யோகிபாபு.

காமெடி, எமோஷன் , காதல், நக்கல், ஏமாற்றம், என பல கோணங்களில் தனது நடிப்பின் நவரசத்தை வெளிப்படுத்தி பாராட்டைப் பெறுகிறார் யோகிபாபு. யதார்த்த கதாபாத்திரத்தில் தனதுமுத்திரையை பதித்து வரும் நடிகை ரேச்சல் ரபேகா இப்படத்திலும், அதே நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.,

போலீஸ் கதாபாத்திரத்தில் வீரா, மிடுக்காக தோன்றியிருக்கிறார். ஆங்காங்கே சின்ன சின்ன கெளண்டர் அடித்துக் கொண்டு கலகலப்பூட்டுகிறார் நடிகர் அப்துல் லீ.

கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களாக அனைவரையும் தேர்ந்தெடுத்ததற்காக இயக்குனரை பெரிதாக பாராட்டலாம்.

படத்தில் இடம்பெற்ற வசனங்கள் பெரிதாகவே கவனம் ஈர்த்தன. “நல்லவனா இருந்தா நல்லவனாகத்தான் இருக்க முடியும், நல்லா இருக்க முடியாது” என்ற வாழ்க்கையின் நடைமுறை தத்துவத்தை விளக்கிச் சென்றிருக்கிறார் இயக்குனர்.

எடுத்துக் கொண்ட கதைக்கு முதலில் இயக்குனருக்கு பெரும் வாழ்த்துகளை கூறிக் கொள்ளலாம். அதிர்ஷ்டத்தை நம்பிக் கொண்டு அதே இடத்தில் இருப்பவர்களுக்கும், தன் உழைப்பை நம்பாமல், அதிர்ஷ்டம் இல்லை என்று கூறி தப்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் இப்படம் ஒரு பாடமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

முதல் பாதி கதை, காமெடி, என கலகலப்பாக கொண்டு சென்றாலும், இரண்டாம் பாதியில் ஆங்காங்கே சற்று சறுக்குவது சற்று சலிப்படைய வைத்தாலும், இரண்டாம் பாதியின் பாதிக்கு மேல் ஸ்பீடு எடுக்கிறது.,

க்ளைமாக்ஸ் காட்சியை தரமாக முடித்து அனைவரின் பாராட்டையும் பெறுகிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.

சந்தீப் கே விஜயின் ஒளிப்பதிவு பாராட்டுக்குறியது. ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

பின்னணி இசை கதையோடு நாமும் நகர கைகொடுத்திருக்கிறது. மதனின் எடிட்டிங் தெகட்டாமல் இனிக்க வைத்திருக்கிறது.

சரவணன் வசந்தின் ஆர்ட் பணிகள் கவனிக்க வைத்திருக்கிறது.

மொத்தத்தில்,

லக்கி மேன் – அதிர்ஷ்டக்காரன்…

Facebook Comments

Related Articles

Back to top button