Spotlightசினிமா

”இந்தியன் 2” படத்தின் நீளத்தை 11 நிமிடங்கள் குறைத்த லைகா

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகி கடந்த வெள்ளியன்று வெளியான படம் “இந்தியன் 2”. மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் இப்படத்தினை தயாரித்திருந்தது லைகா நிறுவனம்.

இப்படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

படம் வெளியான முதலே சமூக வலைத்தளங்களில் பலரும் கலவையான விமர்சனங்களைப் பதிவிட்டனர். படத்தின் நீளம் அதிகம் என்பது பொதுவான ஒரு கருத்தாக இருந்தது.

அதைக் கருத்தில் கொண்டு தற்போது படத்தின் நீளத்தை 11 நிமிடங்கள் 51 வினாடிகள் குறைப்பதென முடிவெடுத்தது லைகா நிறுவனம். அதனைத் தொடர்ந்து இன்று வெளியாகும் காட்சிகளில் இந்த எடிட்டட் வெர்சன் திரையிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும், இந்தியன் 2 படத்தினை குடும்பம் குடும்பமாக அனைவரும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button