
2021 ஆம் ஆண்டு வெளிவந்த ”என்னங்க சார் உங்க சட்டம்” என்ற படத்தில் இடம் பெற்ற “என் ஜீரக பிரியாணி…” என்ற பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் இளம் கவிஞர் ஜெகன் கவிராஜ்.
தென்னாநாட்டு மண்வாசனையிலிருந்து வந்தவரான ஜெகன் கவிராஜ், தனது எழுத்துகள் மூலம் பல முன்னணி கலைஞர்களின் ஆசிர்வாதத்தையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், நட்டி (எ) நட்ராஜ், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகி வரும் “வெப்” என்ற படத்தில் தனது இரண்டாவது பாடலான “புதுப் புது சுகம் தேடும்” என்று தொடங்கும் பாடலை எழுதியிருக்கிறார் ஜெகன்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ அய்யா இளையராஜாவின் முதல் ராஜாவான கார்த்திக் ராஜா அவர்கள் இசையில் அண்ணன் நட்டி நடித்துள்ள Web படத்தில் எழுதியிருக்கிறேன். பாடிய ஸ்வேதா மோகன் அவர்களுக்கும் அழகாக நடனம் அமைத்த சாண்டி மாஸ்டர் அவர்களுக்கும் நன்றி! வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஹாருன் சாருக்கும், வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அண்ணன் Ksk செல்வா அவர்களுக்கு அன்பும் நன்றியும்.
வாழ்வில் எதுவாக இருந்தாலும் மெதுவாகவே கிடைக்கும் வரம் பெற்றவன் அடியேன். அந்த பொறுமைக்கான அறுவடை பெரிதாக இருக்கும் என்ற நம்பிக்கை மட்டும் எப்போதும் உண்டு. பாடலைக் கேட்டு பிடித்திருப்பின் நண்பர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்! பேரன்பும் பெரு நன்றியும்.” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பல படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றி வரும் ஜெகன் கவிராஜ், விரைவில் தமிழ் சினிமாவில் அசைக்க முடியா சக்தியாக உயர்ந்து நிற்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை..
தமிழ்வீதி சார்பாக உன்னத கலைஞனான ஜெகன் கவிராஜ்ஜுக்கு வாழ்த்துகள்…
பாடல் லிங்: