
ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய்குமாரும் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி முடியாததால் ரிலீஸ் தேதி மீண்டும் மீண்டும் தள்ளிப்போனது.
கிராபிக்ஸ் பணிகளை முடிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்பட்டதால் ரிலீஸ் தேதியில் குழுப்பமும் நீடித்தது. சமீபத்தில் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து விட்டதாகவும், படத்தை நவம்பர் மாதம் 29ம் தேதி வெளியிட இருப்பதாகவும் இயக்குனர் ஷங்கர் அறிவித்தார்.
இந்நிலையில், இப்படத்தின் டீசரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக இயக்குனர் ஷங்கர் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.