தி மு க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு க ஸ்டாலின், தனது உடன்பிறப்புகளான கழக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
”தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே,
இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மத்திய அரசுக்கு பாடம் புகட்ட வா!
முதுகெலும்பில்லாத இந்த மாநில அரசை தூக்கி எரிய வா!
அழகான எதிர்காலத்தை ஒன்றாக நாம் மெய்பிப்போம்! இந்த அழைப்பு தென்றலை தீண்ட அல்ல. தீயைத் தாண்டுவதற்கு!
என் உயிரினும் மேலான தமிழினமே!
என் கடைசி மூச்சு உள்ளவரை…
என் கடைசி இதயத் துடிப்புவரை…
உனக்காக உழைத்திடுவேன்!
உனக்காக போராடுவேன்!
இனம், மொழி, நாடு, கழகம் இந்த நான்கையும் எப்போதும் காப்பேன்! ” என்று கூறியுள்ளார்.
Facebook Comments