
பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்த டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசும் போது, ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மேலும் மேலும் வளர்ந்து வருகிறது.
ஒரு சிலர் சுயநலத்திற்காக வெளியேறுவதால், அவர்களால் இந்த இயக்கத்திற்கு இப்போது அல்ல, எப்போதும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் அமமுக மிகப்பெரும் அளவில் யாரும் அசைக்க முடியாத கட்சியாக உருவெடுத்து அந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும்.
தமிழகத்தில் இந்தியை யாரும் எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பை தான் பல வருடமாக எதிர்த்து வருகிறோம்.
அதனால், காங்கிரஸ் செய்த தவறை பிஜேபி செய்யாது என நம்புகிறோம்.’ என்று கூறினார்.
Facebook Comments





