Spotlightசினிமா

மு.க. ஸ்டாலின் வெளியிட்டார் கரு. பழனியப்பன் இயக்கும் ‘குக்கர்’ படத்தின் டைட்டில்!

யக்குநர் M. K. Stalin அவர்களை, திரைப்பட இயக்குநர் Karu Palaniappan இன்று (15.06.2026) சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது, கரு. பழனியப்பன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘குக்கர்’ படத்தின் தலைப்பை மு.க. ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

சமூக கருத்துக்களையும் சமகால அரசியல் பார்வைகளையும் தனது படைப்புகளில் தனித்துவமாக வெளிப்படுத்தி வரும் கரு. பழனியப்பன், தற்போது ‘குக்கர்’ திரைப்படத்தின் மூலம் புதிய கதைக்களத்துடன் ரசிகர்களை சந்திக்கத் தயாராகி வருகிறார்.

இந்த நிகழ்வில் நடிகர் Kaali Venkat மற்றும் ஒளிப்பதிவாளர் Rajasekaran ஆகியோரும் உடனிருந்தனர். படத்தின் நடிகர், தொழில்நுட்பக் குழு மற்றும் கதைக்களம் தொடர்பான கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button