Spotlightசினிமா

‘ராபின்ஹூட்’ற்கு உயிர் கொடுக்கும் மதன் கார்க்கி வரிகள்!

மதன் கார்க்கி அனைத்து சாரங்களிலும் பாடல் வரிகள் எழுதுவதில் முன்னோடியாக விளங்குகிறார். நிச்சயமாக, அவர் கவித்துவமான கவிதை வரிகள் எழுதுவதோடு நின்று விடவில்லை, ‘லிரிக் எஞ்சினியரிங்’ என்று சொல்லப்படும் ‘பாடல் வரிகள் பொறியியலை’ உருவாக்கியிருக்கிறார். இந்தத் துறையில் முதன்முதலாக இதனை செய்த கார்க்கி, வசனம் எழுதுவதிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். நேரடி மற்றும் புத்தம் புதிய ஸ்கிரிப்ட்க்கு வசனம் எழுதுவதே ஒரு கடினமான பணியாக இருக்கும்போது, அதுவும் டப்பிங் பதிப்புகளுக்கு எழுதுவது எப்படி இருக்கும். இந்த வகையில், மதன் கார்க்கி பாகுபலி படங்களுக்கும், சமீபத்திய கிளாசிக்கல் ஹிட்டான ‘நடிகையர் திலகம்’ படத்துக்கும் வசனம் எழுதியது ஒரு மகத்தான, தனித்துவமான சாதனை. இதன் மூலம், மதன் கார்க்கி மற்ற பிராந்திய மொழிகளில் உருவாகும் சரித்திர படங்களுக்கு, அதன் சாரம் மாறாமல் தமிழுக்கு வசனம் எழுதும் ஒரு ‘நுழைவாயில்’ ஆனார்.

நிவின் பாலியின் பிரமாண்டமான மலையாள திரைப்படமான ‘காயம்குளம் கொச்சூன்னி’ படத்திற்கு வசனம் எழுதி வருகிறார் மதன் கார்க்கி. 1800 ஆம் ஆண்டுகளின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த படம், ராபின்ஹூட் போன்ற கதாபாத்திரத்தை சுற்றி அமைந்துள்ளது. படத்தை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பற்றி பகிர்ந்து கொள்ளும் போது, “இந்த படம் பண்டைக்கால பின்னணியில் அமைந்திருந்தாலும் மையக்கதாபாத்திரம் ஒரு சாதாரண மனிதன். எனவே தனித்துவமாக இதை கையாள முடிவு செய்தோம். இது மிகவும் பழையதாகவோ அல்லது முற்றிலும் சமகாலத்திலோ இல்லை. தமிழ் ரசிகர்கள் ஒரு மொழி மாற்று திரைப்படத்தை பார்க்கிறோம் என்று நினைக்காமல் இருக்க வைக்கும் ஒரு பெரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது” என்றார்.

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ள இந்த படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ள மதன் கார்க்கி, இந்த படத்திற்கு தற்காலிக தலைப்பாக ‘மலைக்கள்ளன்’ என்ற தலைப்பை வைக்க நினைத்ததாக கூறினார். இருப்பினும், இந்த தலைப்புக்கான உரிமையை படக்குழு முறைப்படி பெற்றால் தான் வைக்க முடியும் அல்லது வேறு ஒரு புதிய தலைப்பு வைக்கப்படும்.

நிவின் பாலி, பிரியா ஆனந்த், பிரியங்கா திம்மேஷ், சன்னி வேன், பாபு ஆண்டனி மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் மோகன்லால் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது ஒரு கூடுதல் ஈர்ப்பு ஆகும்.

Facebook Comments

Related Articles

Back to top button