மகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவோம் மாவட்டத்தில் உள்ள வகாதி என்ற கிராமத்தில் இருக்கும் கிணற்றில் கடந்த 10-ம் தேதி மூன்று தலித் சிறுவர்கள் குளித்துள்ளனர்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிறுவர்களை ஆடைகளை அணிய விடாமல், நிர்வாணமாக வைத்து தாக்கியுள்ளனர்.
மேலும், சிறுவர்களை சிறிதும் மனிதாபிமானம் இன்றி அங்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
3 சிறுவர்களும் தலித் பிரிவினர் என்பதால் அங்குள்ள உயர்சாதியினர் இந்த கொடூரத்தை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சமூக நீதி துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
Facebook Comments