Spotlightஇந்தியா

மலேசியாவில் நான்கு தமிழர்களுக்கு அமைச்சர் பதவி!

கோலாலம்பூர்: மலேசிய நாட்டின் நாடாளுமன்ற தேர்தல், கடந்த மே மாதம் நடைபெற்றது. இதில் மஹாதீர் முகமது தலைமையிலான பக்கட்டான் ஹரப்பன் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பிரதமராக மஹாதீர் முகமது பதவியேற்றார்.

இந்நிலையில், தனது அமைச்சரவையை விரிவுபடுத்தியுள்ள பிரதமர் மஹாதீர் முகமது, 4 தமிழர்கள் உட்பட 5 இந்தியர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளார். அதன்படி, குலசேகரன் மனிதவளத்துறை அமைச்சராகவும், சிவராசா ராசையாவுக்கு நீர் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சராகவும், வாய்தா மூர்த்தி வெளியுறவுத்துறை அமைச்சராகவும், சீக்கியரான கோபிந்த் சிங் டியோ தொலை தொடர்பு அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர். மேலும், ராஜரத்தினம் என்பவருக்கு பிரதமர் அலுவலகத் துறையில் இந்திய விவகாரங்களை கவனிக்கும் அமைச்சரவை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மொத்தம் 28 பேர் கொண்ட அமைச்சரவையில், 4 தமிழர்கள் உள்பட ஐந்து இந்தியர்கள் இடம் பெற்றுள்ளது வரலாற்றில் முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button