2018 – 2020 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் 24.6.2018 காலை சென்னை வடபழநியில் உள்ள யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது.தற்போதைய தலைவர் டைமண்ட் பாபு, தற்போதைய பொருளாளர் விஜய முரளி இருவரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
பிற்பகல் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் விஜயமுரளி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
துணைத் தலைவர் பொறுப்புக்கு இராமானுஜம், கோவிந்தராஜ், இணை செயலாளர் பொறுப்புக்கு குமரேசன், ஆனந்த், பொருளார் பொறுப்புக்கு குமரேசன், ஆனந்த், பொருளாளர் பதவிக்கு யுவராஜ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பொதுச் செயலாளர் பொறுப்புக்கு பெருதுளசி பழனிவேல் மீண்டும் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் ஏகமனதாக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் திரு.வி.எம்.ஆறுமுகம், திரு.கிளாமர் சத்யா, திரு.மதுரை செல்வம், திரு.வி.பி.மணி, திரு.நிகில் முருகன், திரு.என்.சரவணன், திருமதி.சாவித்ரி, திரு.எஸ்.சங்கர், திரு.கே.செல்வகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.