Spotlightசினிமா

‘மன்னாரு’ பாடல் வெளியானது – சந்தோஷ் நாராயணன் இசையில் புதிய இசைப் பயணத்தை தொடங்கும் ரகிட் என்டர்டெயின்மென்ட்!

தமிழ் இசை உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் வகையில், ரகிட் என்டர்டெயின்மென்ட் சார்பில் மன்னர் முத்து மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் முதல் இசை வெளியீடான ‘மன்னாரு’ பாடல் இன்று, ஆகஸ்ட் 8 முதல் அனைத்து முக்கிய இசைத் தளங்களிலும் வெளியாகியுள்ளது.

தனித்துவமான குரலுக்கு பெயர் பெற்ற மன்னர் முத்து, ‘மன்னாரு’ பாடலை பாடியுள்ளார். பாடலுக்கான இசை அமைப்பு, இசை நிரலாக்கம் மற்றும் கருத்தாக்கத்தை சந்தோஷ் நாராயணன் மேற்கொண்டுள்ளார். விறுவிறுப்பான காட்சிகளுடன் உற்சாகமான இசையை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல், ரசிகர்களுக்கு புதுமையான இசை அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்தப் பாடலின் வீடியோவை கென் ராய்சன் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணனின் கருத்தாக்கத்தில் உருவாகியுள்ள வீடியோவுக்கு ஜகதேஷ் ஜெயமணி ஒளிப்பதிவு செய்துள்ளார். அபிஜீத் லக்ஷ்மிநரசிம்மன் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் ‘மன்னாரு’

‘மன்னாரு’ பாடலுக்கு கே. காட்டியன் மற்றும் கானா பிரான்சிஸ் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். பேஸ் கிட்டார், கீபோர்டு, டிரம்ஸ், டோலக் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகளின் பங்களிப்புடன் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

பாடலின் ஒலிப்பதிவை சந்தோஷ் நாராயணன், கார்த்திக் மாணிக்கவாசகம், ரூபெந்தர் வெங்கடேஷ் மற்றும் பிரணவ் முனிராஜ் மேற்கொண்டுள்ளனர். சென்னை ஃப்யூச்சர் டென்ஸ் ஸ்டுடியோஸ்-ல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மிக்சிங்கை சந்தோஷ் நாராயணன் மேற்கொண்டுள்ளார். கூடுதல் மிக்சிங்கை ரூபெந்தர் வெங்கடேஷும், மாஸ்டரிங்கை ஆர்.கே. சுந்தரும் கவனித்துள்ளனர்.

விறுவிறுப்பான வீடியோ காட்சிகள்

‘மன்னாரு’ பாடலின் வீடியோவில் ஜிமிகிலி, பச்சகிளி, பிரான்சிஸ், சப்பா தல, அபெலோ, முனியா, சந்தோஷ், தேவராஜ் இசைக்குழு, கிருஷ்ணமூர்த்தி, ஆகாஷ், ஸ்வாதி, தாரணி, ஹேர்கட் முருகன், கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மேலும், வியாசர்பாடி J.J.R. நகர் சிறுவர்கள், வியாசர்பாடி SC STEDS கால்பந்து அணியினர் மற்றும் வியாசர்பாடி சத்யா மூர்த்தி நகர் 51, 52, 53-வது பிளாக் சிறுவர்கள் சிறப்பு பங்கேற்பு வழங்கியுள்ளனர்.

வீடியோவின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை அபிஜீத் மேற்கொண்டுள்ள நிலையில், டிஜிட்டல் இமேஜிங்கை மாங்கோ போஸ்ட் மற்றும் கலரிங்கை ஃபிராங்க்ளின் வி கவனித்துள்ளனர்.

தமிழ் இசை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மன்னாரு’, மன்னர் முத்து மற்றும் சந்தோஷ் நாராயணன் இணையும் புதிய இசைப் பயணத்தின் முதல் படியாக அமைந்துள்ளது.

🎧 ‘மன்னாரு’ பாடலை கேட்க:
YouTube-ல் ‘மன்னாரு’ பாடல்

Facebook Comments

Related Articles

Back to top button