Spotlightவிமர்சனங்கள்

மெரினா புரட்சி; விமர்சனம்

2017 ஆம் ஆண்டு தமிழகம் மட்டுமல்ல உலகத்தையே உலுக்கிய ஒரு சம்பவம் என்றால் அது தமிழர்களின் வீர விளையாட்டான ‘ஜல்லிக்கட்டு’ போட்டி நடத்த நடைபெற்ற மாபெரும் போராட்டம்.

இந்நிகழ்வை அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியாது. ஏனெனில், உண்ண உணவு, தங்குமிடம், வெயில், மழை, சுகாதாரம் என எதையும் காணாமல். ஜல்லிக்கட்டு ஒன்றிற்காக தமிழர்கள் அனைவரும் ஒன்றினைந்து தங்களது ஒற்றுமையை காட்டிய ஒரு மாபெரும் புரட்சி போராட்டம் தான் அது.

கன்னியாகுமரியில் ஆரம்பித்து சென்னை வரை அனைத்து மாவட்டங்களிலும் இந்த போராட்டம் வீறு கொண்டு வெடித்தது. சென்னை மெரினாவில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டு இப்போராட்டத்தை வெற்றிகரமாக போராட்டமாக மாற்றினர்.

இப்போராட்டம் எங்கு ஆரம்பிக்கப்பட்டது, ஏன் ஆரம்பிக்கப்பட்டது, யாரால் ஆரம்பிக்கப்பட்டது, அதன் பாதிப்புகள் என்னென்ன, அதன் நன்மைகள் என்னென்ன என்பதை விரிவாக விளக்கிய திரைப்படம் தான் இந்த ‘மெரினா புரட்சி’.

இந்த விளக்க படத்தில் புட் சட்னி புகழ் ராஜ்மோகன், நவீன், ஸ்ருதி ஆகியோர் நடித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் மற்றும் யூ ட்யூப் தளத்தில் வெளியான வீடியோவை கோர்வையாக இணைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர்.

யாரோ ஒரு சிலரை நல்லவராக காண்பிப்பதற்காகவும் யாரோ ஒரு சிலரை கெட்டவராக பிம்பப்படுத்துவதற்காகவும் நெய்யப்பட்டது போல் தான் இப்படம் உணர்த்துகிறது.

உலகமே திரும்பி பார்க்க வைத்த ஒரு நன்னிகழ்வு காலம் போற்றும் வரலாறாகவே இருக்கட்டும், அதை களங்கப்படுத்தவோ அந்த புரட்சியின் வெற்றி திலகத்தை யாரும் தனக்கென்று உரிமை கொண்டாடவோ முயற்சி செய்ய வேண்டாம்.

Facebook Comments

Related Articles

Back to top button