
மாஸ்டர் செப் நிகழ்ச்சியானது மிகவும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி. இது சில தினங்களுக்கு முன் தமிழ் மற்றும் தெலுங்கில் தொடங்கப்பட்டது.
தமிழில் நடிகர் விஜய் சேதுபதியும் தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்கினர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, துவங்கப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு மக்கள் போதுமான ஆதரவை தரவில்லை.
இதனால், அப்செட்டான மாஸ்டர் செப் டீம், தமன்னாவை அதிரடியாக நீக்கியுள்ளது.
தமன்னாவின் கால்ஷீட் பிரச்சனையும் இதற்கு காரணம் எனவும் கூறப்பட்டு வருகிறது. நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அனுசியா வரவிருக்கிறாராம்.
நாளுக்கு நாள் ”மாஸ்டர் செப்” நிகழ்ச்சி மீதான பார்வையாளர்களும் குறைந்து வருகிறார்களாம்.
குக் வித் கோமாளி மாதிரி நாமளும் பெருசா வரணும்னு நினைச்சு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியை தொடர்வதா இல்லனா இத்தோட முடிச்சிக்கலாம்ன்னு யோசிச்சிட்டு வர்ராங்களாம் மாஸ்டர் செப் டீம்..