Spotlightசினிமா

படங்களின் உயிர் மூச்சே நாங்கள் தான் – கெத்து காட்டும் பி ஆர் ஓ ப்ரியா!

ட ஆற்காடு மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள மான்காரனூரை சேர்ந்தவர் ப்ரியா. இவர் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஆற்காடு மாவட்டத்திலேயே பட்ட படிப்பை முடித்த ப்ரியா, பட்ட மேற்படிப்பிற்காக சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் எம் ஏ மாஸ் கம்யூனிகேஷன் படிப்பை முடித்தார்.

பின், இலங்கை இனையதளம் ஒன்றில் ஆர் ஜே’வாக பணிபுரிந்தார். அதிலிருந்து, ஜெயா டிவி, சன் டிவி, விஜய் டிவி, சன் லைஃப், ஆதித்யா டிவி என பல முன்னனி சேனல்களில் வேலை பார்த்து தனது திறமையை தன்னகத்தே வளர்த்துக் கொண்டார்.

பின், தமிழ் சினிமாவின் ஒரு தூணாக விளங்கும் சினிமா மக்கள் தொடர்பாளர்(PRO) பணியில் தன்னை இணைத்துக் கொண்டார். பிரபல மக்கள் தொடர்பாளரான திரு. டைமண்ட் பாபு அவர்களிடம் உதவியாளராக தன்னை இணைத்துக் கொண்டு PRO தொழிலின் அடித்தளத்தை நன்கு கற்றுக் கொண்டு சினிமா பிரபலங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களிடம் நற்பெயரையும் பெற்றார்.

பின் திரு. டைமண்ட் பாபு அவர்களின் ஆசியோடு PRO’வாக தமிழ் சினிமாவில் களமிறங்கினார். கடுமையாக உழைத்து பல நட்சத்திரங்களுக்கு மேனேஜராகவும், PRO’வாகவும் ஆகி, பல படங்களுக்கும் PRO’வாக தன்னை வளர்த்துக் கொண்டார்.

சினிமா மக்கள் தொடர்பாளர்கள் மத்தியில் தனக்கென ஒரு பாதையை வகுத்து, அதில் செவ்வெண பயணிக்க ஆரம்பித்தார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, ‘ தமிழ் சினிமாவின் மிகவும் முக்கியமாக தூண் என்றால் அது நாங்கள்(PRO) தான். நாங்கள் மட்டுமே ஒரு படத்தை மக்களிடம் நல்ல முறையில் எடுத்துச் சென்று அவர்களை திரையரங்கிற்கு வர வைக்கிறோம்.

ஒரு படத்தின் பூஜையில் ஆரம்பித்து அப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ப்ரொமோஷன்ஸ், ப்ர்ஸ் மீட், ப்ரஸ் ஷோ, என அனைத்திற்கும் எங்களது உழைப்பு மிகவும் முக்கியமானது. தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் பி ஆர் ஓ’வாக வரவேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். விரைவில் என் லட்சத்தியத்தை எனது குடும்பத்தின் ஆசியோடு விரைவில் அதை அடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.’ என்றார்.

உங்களது கனவு மெய்ப்பட தமிழ்வீதி சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் பி ஆர் ஓ ப்ரியா அவர்களே….

Facebook Comments

Related Articles

Back to top button