
2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இணைந்து தயாரித்துள்ள “பொன்மகள் வந்தாள்” படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என படத்தின் முக்கியக் கதாப்பாத்திரங்களில் ஐந்து இயக்குநர்கள் நடித்துள்ளனர். சுப்பு பஞ்சுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இணையவாசிகள், இல்லப் பெண்மணிகள் உள்பட அனைத்து தரப்பினராலும் ரசிக்கக் கூடிய வகையில் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ஜே.ஜே ஃபெரெட்ரிக். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு, ரூபன் எடிட்டிங், கலை இயக்கம் அமரன்.
ஒவ்வொரு மனிதரின் உள்ளங்கையிலும் திரைப்படத்தைக் கொண்டு சேர்க்கும் அமேசான் ப்ரைம் பொன்மகள் வந்தாள் படத்தை வெளியிடுவதைக் குறித்து படத்தின் இணைத் தயாரிப்பாளரும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் CEO-வும் ஆன ராஜசேகர கற்பூரசுந்தரபாண்டியன் கூறியதாவது..
” ‘பொன்மகள் வந்தாள்’ பட வெளியீட்டிற்காக ‘அமேசான் ப்ரைம் வீடியோ’வுடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம்”.
“ஃபர்ஸ்ட் லுக் வெளியான நாளில் இருந்து படம் பற்றிய மேற்கொண்ட விவரங்கள் பற்றி அறிய மக்கள் எங்களிடம் கோரிக்கைகள் வைத்துக் கொண்டே இருந்தார்கள். படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியிடப்படுவதால், பார்வையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப எங்கும், எப்போது வேண்டுமானாலும் படத்தையும் படத்தில் அற்புதமாக அமைந்துள்ள நீதிமன்ற காட்சிகளையும் பார்த்து மகிழலாம்” என்கிறார் படத்தின் இயக்குநர் ஜே.ஜே.பிரேட்ரிக்.
அமேசான் ப்ரைம் வீடியோவில் பொன்மகள் வந்தாள் படம் உட்பட வெவ்வேறு மொழிகளில் ஏழு படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. மக்களிடம் பெரும் எதிர்பார்ப்புள்ள ஏழு இந்தியத் திரைப்படங்களை அமேசான் ப்ரைம் வீடியோ நேரடியாக உலகளாவிய அளவில் ப்ரீமியர் செய்யவுள்ளது.
” அமிதாப் பச்சன் ( Black, Piku ) மற்றும் ஆயுஷ்மான் குரானா ( Shubh Mangal Zyaada Saavdhan, Andhadhun ) நடித்துள்ள ஷுஜித் சிர்காரின் (Shoojit Sircar ) “குலாபோ சிதாபோ” (Gulabo Sitabo ) வித்யாபாலன் ( Dirty Picture, Kahaani ) நடித்துள்ள “சகுந்தலா தேவி” (Shakuntala Devi), ஜோதிகா நடித்துள்ள “பொன்மகள் வந்தாள்” மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள “பென்குயின்” ( தமிழ் மற்றும் தெலுங்கு ) உட்பட ஏழு இந்திய மொழித்திரைப்படங்கள் மே மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதத்திற்குள் வரிசையாக அமேசான் பிரைமில் வெளியிடப்பட இருக்கிறது.
சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட் அப் காமெடி, ப்ரைம் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங், அமேசான் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரமற்ற இசை கேட்டல், இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்புகளின் இலவச துரித டெலிவரி, முதன்மையான டீல்களை முன்கூட்டியே அணுகும் வசதி, ப்ரைம் ரீடிங் வழியாக கட்டுப்பாடில்லாத, அளவில்லாத வாசிப்பு என அற்புதமான மதிப்புமிக்க வசதிகளை மாதம் வெறும் ரூ. 129 கட்டணத்தில் ப்ரைம் வழங்குகிறது.
“அமேசானில் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் குரலுக்கு செவிமெடுக்கிறோம். அதன் அடிப்படையில் எங்களது பணிகளை மேற்கொள்கிறோம்” என்று அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியாவின் கண்டன்ட் பிரிவின் இயக்குநரும் தலைவருமான விஜய் சுப்பிரமணியம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல்வேறு மொழிகளீல் திரையரங்கில் வெளியாகும் புதிய திரைப்படங்களை, வெளியான ஒரு சில வாரங்களிலேயே பார்க்க, வாடிக்கையாளர்களுக்குப் பிடித்த, அவர்கள் விரும்பும் தளமாக ப்ரைம் இந்தியா மாறியுள்ளது. இப்போது நாங்கள் இதை ஒருபடி மேலே கொண்டு செல்கிறோம். இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஏழு திரைப்படங்கள் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது. சினிமா அனுபவத்தை வாடிக்கையாளர்களின் வீட்டு வாயிலுக்கே கொண்டு சேர்க்கிறோம்” என்றும் கூறியுள்ளார்.
“மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த 7 படங்களின் வெளியீட்டை இந்தியப் பார்வையாளர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். மற்றும் வாடிக்கையாளர்களுக்காக இந்தத் திரைப்படங்களை முதன்மையாக அமேசான் ப்ரைம் வீடியோ வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருந்தபடி வசதியாகவும், மற்றும் தங்களுக்கு விருப்பமான திரையிலும் இவற்றைப் பார்த்து ரசிக்க முடியும். ப்ரைம் வீடியோ இந்தியாவில் அதன் ஆழமான ஊடுருவலுடன் 4000-க்கும் மேற்பட்ட டவுன் மற்றும் நகரங்களில் பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.
மற்றும் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உலகளாவிய ரீதியில் சென்றடைவதன் வழியாக இந்தப்படங்களுக்கு ஒரு பெரிய உலகளாவிய வெளியீட்டுத் தளத்தை அளிக்கிறது. இந்த முன் முயற்சியைப் பற்றி நாங்கள் உண்மையிலேயே உற்சாகமாக உணர்கிறோம். மற்றும் இந்த வெளியீடுகளால் எங்கள் பிரைம் உறுப்பினர்களை மகிழ்விப்போம் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியுள்ளார் அமேசான் பிரைம் வீடியோ இந்தியாவின் இயக்குநரும் மற்றும் தேசிய பொது மேலாளருமான கெளரவ் காந்தி.